உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் முகப்பு மண்டப பணி தீவிரம்

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் முகப்பு மண்டப பணி தீவிரம்

ஆர்.எஸ்.மங்கலம் : உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் முகப்பு மண்டபம் அமைக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மேல் மண்டபம் உள்ள நிலையில் மூலவரான விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி கதிர் பட்டு வருகின்றன. இதனால் இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்பட்டு வருகிறார்.இந்த கோயிலின் முகப்பில் மண்டபம் இன்றி ஓட்டு கொட்டகையாக இருந்து வந்ததால், மழை காலங்களில் பக்தர்கள் சிரமப்பட்டனர்.அதைத் தொடர்ந்து ஓட்டுக்கொட்டகை அகற்றப்பட்டு கோயில் முன்பு முகப்பு மண்டபம் கட்டும் பணி முன்னாள் அமைச்சரும், கோயில் திருப்பணி குழு தலைவருமான வ.து.நடராஜன் தலைமையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மண்டபத்தின் மேல் சிற்பங்கள், சிமென்ட் பூச்சு உள்ளிட்ட முகப்பு மண்டப பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !