சோழிங்கநல்லூரில் நரசிம்ம சகஸ்ரநாம பாராயணம்
ADDED :2864 days ago
சென்னை:லட்சுமி நரசிம்ம சகஸ்ரநாம பாராயண மகோற்சவம், சோழிங்கநல்லுாரில் நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டம், ஹரிஹரபுரத்தில், ஸ்ரீ மடம் எனும் ஆதி சங்கராச்சார்ய சாரதா லட்சுமி நரசிம்ம பீடம் அமைந்துள்ளது. அப்பீடத்தின் பீடாதிபதியான, ஸ்வம்பிரகாஷ சச்சிதானந்த சரஸ்வதி மகா சுவாமி, டிச., 24ம் தேதி, சென்னைக்கு விஜயம் செய்தார்.சென்னையில் பல இடங்களில், ஸ்ரீ சக்ர நவாவர்ண பூஜை நடத்தி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.இந்நிலையில், நேற்று காலை, 10:30 மணிக்கு, சோழிங்கநல்லுார், ராஜிவ்காந்தி சமாஜ், உமாதிரி மகாலில், சுவாமிகள் முன்னிலையில், லட்சுமி நரசிம்ம சகஸ்ரநாம பாராயண மகோற்சவம் நடந்தது. அதை தொடர்ந்து, சச்சிதானந்த சுவாமிகள் அருளாசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.