ஆதனுாரில் சிவப்பு அல்லி குளம்
ADDED :2865 days ago
ஆதனுார்: ஆதனுாரில் சிவப்பு அல்லி பூ நிறைந்த கோவில் குளத்தை பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனுார் ஊராட்சியில் பழமையான அகதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சிதிலமடைந்து காணப்பட்ட இந்த கோவிலை அப்பகுதி மக்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் புதுப்பித்து கட்டி உள்ளனர். இந்த கோவிலுக்கு எதிரே குளம் உள்ளது. இந்த குளத்தில் சிவப்பு நிறஅல்லி பூக்கள் கண் கவரும் வகையில் மலர்ந்து காணப்படுகின்றன. இதை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். சிலர் குளத்தில் உள்ள பூக்களை பறித்தும், அள்ளி செடியை எடுத்தும் செல்கின்றனர். இந்த குளம் பராமரிப்பு இன்றி உள்ளது. குளத்தை சீரமைத்து, குளத்தை சுற்றி நடைபாதை அமைக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.