உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை
ADDED :2865 days ago
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் மார்கழியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. மங்களநாதர், நாகாபரணத்துடனும், மங்களேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பூஜையில் மலர் அலங்காரத்தில் உற்ஸவர் கூத்தபெருமான் பகத்ர்களுக்கு அருள்பாலித்தார். சிவபுராணம், திருவொம்பாவை பக்தர்களால் பாடப்பட்டன. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.