ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் சிறப்பு ேஹாமம்
ADDED :2940 days ago
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில், விவேகானந்தரின் 155 வது ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி காலை 8:30 மணிக்கு, விவேகானந்தர் ரதோற்வம் நடந்தது. தொடர்ந்து மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு ேஹாமம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சாரதா ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா தலைமை தாங்கினார். சாரதா ஆசிரம தலைமை சுவாமிஜி அனந்தானந்த மகாராஜ், ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா அம்பா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.