மோகினி தரிசனம்!
ADDED :2866 days ago
சிவனாரின் வீரச் செயல்கள் நிகழ்ந்த திருத்தலங்களை அட்டவீரட்ட தலங்கள் என்பர். அவற்றில் ஒன்று வழுவூர். சிவனார், யானைத் தோலுரித்த தலம் இது. சிவபெருமான் தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்க வந்தபோது அவரோடு திருமால் மோகினியாய் உருவெடுத்து வந்தார் அல்லவா? இந்தத் தலத்தில் மோகினியின் திருவடியைக் காணலாம். தலைமுடியைக் கொண்டையிட்டு முடிந்து, இடையைச் சாய்த்து, நீண்ட ஊன்றுகோலின் மீது சாய்ந்தபடி காட்சியளிக்கிறார் மோகினி. கையில் கிளியும் உண்டு. பக்தர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய திருவடிவம்!