கடம்பர் கோவிலில் தைப்பூசம் திருவிழா ஆலோசனை கூட்டம்
ADDED :2851 days ago
குளித்தலை: குளித்தலை கடம்பர்கோவிலில், தைப்பூச விழா ஏற்பாடுகள் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தினர். ஆர்.டி.ஓ., விமல்ராஜ் தலைமை வகித்தார். வரும், 31ல் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்ளும் எட்டு கோவில் செயல் அலுவலர்கள், குருக்கள், சுவாமி துாக்குபவர்கள், சுவாமி சந்திப்பு, அன்று மாலை நடைபெறும். அதையடுத்து, தீர்த்த வாரி நடக்கும் என, தெரிவிக்கப்பட்டது. மேலும், சுவாமி துாக்கிவரும் பணியாளர்கள் அந்தந்த கோவில் பெயர் பொறித்த உடையில் வரவேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. நகராட்சி கமிஷனர், அரசு மருத்துவர், தீயணைப்புத் துறை அலுவலர் உட்பட பலர் பங்கேற்றனர்.