பழநியில் 20 நாளில் ரூ.2.32 கோடி வசூல்
ADDED :3157 days ago
பழநி: பழநி முருகன்கோயில் உண்டியலில் 20 நாட்களில் ரூ. 2கோடியே 32லட்சத்து 16ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி முருகன்மலைக்கோயிலுக்கு, சபரிமலை ஐயப்பபக்தர்கள், தைப்பூசம் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. 20 நாட்களில் நிரம்பிய, உண்டியல்கள் திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக ரூ. 2கோடியே 32லட்சத்து, 16ஆயிரத்து 114, தங்கம்-810 கிராமும், வெள்ளி-9,980 கிராமும், வெளிநாட்டு கரன்சி- 893 கிடைத்துள்ளது. இணைஆணையர் செல்வராஜ், திண்டுக்கல் உதவிஆணையர் சிவலிங்கம், வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.