சோலைமலை முருகன் கோயிலில் ஜன.22ல் தைப்பூச கொடியேற்றம்
ADDED :2843 days ago
மதுரை, மதுரை அழகர்கோவில் சோலைமலை மண்டபம் ஆறாவது படை வீடு முருகன் கோயிலில் தைப்பூச கொடியேற்றம் ஜன.,22ல் காலை 9:45 மணிக்கு மேல் காலை 10:15 மணிக்குள் நடக்கிறது. மாலை 4:20 மணிக்கு யாகசாலை பூஜைகள், மாலை 6:00 மணிக்கு பூதவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஜன.,23 அன்ன வாகனம், 24ல் காமதேனு வாகனம், 25ல் ஆட்டுக்கிடா வாகனம், 26ல் பூச்சப்பரம் புறப்பாடு, 27ல் யானை வாகனம், 28ல் பல்லாக்கு புறப்பாடு, 29ல் குதிரை வாகனம், 30ல் தங்கத்தேரோட்டம், 31ல் வெள்ளி மயில் வாகனம் மற்றும் தீர்த்தவாரி நடக்கிறது. விழா காலங்களில் தினமும் மாலை 6:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், செயல் அலுவலர் மாரிமுத்து செய்து வருகின்றனர்.