சாய் தபோவனத்தில் மார்கழி ஆரத்தி விழா
ADDED :2844 days ago
நாமக்கல்: நாமக்கல், பரமத்தி சாலையில் உள்ள தொட்டிப்பட்டி, சாய் தபோவனத்தில், மார்கழி மாத சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் அடுத்த தொட்டிப்பட்டி, சீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், மார்கழி மாத சிறப்பு ஆரத்தி விழாவில், சாய்பாபாவிற்கு பல்வேறு விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கொண்டு வரப்பட்ட மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சீரடியில் இருந்து, சாய் தபோவனத்திற்கு வருகை தந்த சக்திசாய் சுவாமிகள், பக்தர்களிடம் சிறப்பு சொற்பொழிவாற்றினார். பாபாவின் பஜனை நிகழ்ச்சி, மதியான் ஆரத்தி என்னும் ஆரத்தி பாடப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.