உலக நன்மை வேண்டி சதுர்லச ஜப மஹா யாகம் நிறைவு
ADDED :2856 days ago
வெள்ளோடு: ஈரோடு மாவட்ட, திருக்கோவில் அர்ச்சகர்கள் பரிபாலன சங்கம் சார்பில், உலக நன்மை வேண்டி, மஹா கணபதி சதுர்லச ஜப மஹா யாகம், வெள்ளோடு அடுத்த, வி.மேட்டுபாளையத்தில், செல்வ விநாயகர் ஆலய வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், 108 சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதினர். இரண்டாம் நாளாக நேற்றும் நடந்தது. காலை தொடங்கிய வேள்வி, இரவு யாகசாலை பூஜையுடன் முடிந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.