உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேச்சில் கவனம் தேவை

பேச்சில் கவனம் தேவை

நமக்கு நாக்கு படைக்கப்பட்டிருப்பது சாப்பாட்டை ருசிக்க மட்டுமல்ல. பேச்சில் கவனம் செலுத்தவும் தான்!

இதோ பேச்சுக்கான கட்டளைகள்:
●  தேவையிருந்தால் மட்டும் பேசுங்கள்.
●  நன்மை தரும் பேச்சை மட்டும் பேசுங்கள்.
●  மலர்ந்த முகத்துடன் கண்ணியமாக பேசுங்கள்
●  மென்மையான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள்.
●  மற்றவர் கேட்க முடியாத அளவுக்கு தாழ்ந்த குரலில் பேசாதீர்கள்
●  பிறர் பயப்படும்படி உரக்கவும் பேசாதீர்கள்
●  பிறர் மனம் வலிக்கும்படி பேசாதீர்கள்
●  நீதி தவறாமல் பேசுங்கள்
● தீய பேச்சால் நாக்கை கறைப் படுத்தாதீர்கள்
● பிறருடைய குறைகள் பற்றி பேசாதீர்கள்
● உங்கள் நாக்கு கோள் சொல்லக் கூடாது
● பிறரை கேலி செய்யும் வகையில் பேசாதீர்கள்
●  பொய்யான வாக்குறுதிகளை வீசாதீர்கள்
●  யாருக்கும் பட்டப்பெயர் வைக்காதீர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !