உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்னும் போது பிறவா வரம் வேண்டுவது ஏன்?

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்னும் போது பிறவா வரம் வேண்டுவது ஏன்?

அரிதான மனிதப்பிறவியை பயனுள்ளதாக ஆக்க வேண்டும். பாவம் செய்து மறுபிறவியில் கீழான நிலை அடைவது கூடாது.  வீடுபேறு என்னும் இறைவன் திருவடியை அடைய முயற்சிக்க வேண்டும். இதை “பிறவா வரம்” என  குறிப்பிடுவர்.  “உன்னை வழிபடுவதை தவிர வேறேதும் மனித பிறவியின் நோக்கமில்லை” என்று திருநாவுக்கரசரும்,  ‘இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகமாளும் அச்சுவைப் பெறினும் வேண்டேன்” என்று  தொண்டரடி பொடியாழ்வாரும் பாடியுள்ளதை இங்கு நாம் சிந்திக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !