150 ஆண்டுக்கு பின் சிறப்பு தை அமாவாசை: திருப்புவனத்திற்கு பக்தர்கள் வருகை
திருப்புவனம்: முழுவதும் நேற்று 150 ஆண்டுகளுக்கு பிறகு கரிநாளுடன் வந்த தை அமாவாசை நாளில் பக்தர்கள் நீர் நிலைகளில் நீராடிமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற தினங்களில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பதுமிகவும் சிறப்பு வாய்ந்தது என இந்துக்களால் நம்பப்படுகிறது. தாதையர்கள் வாழும் காலங்களில் அவர்களை சரிவர கவனிக்காததால்அவர்கள் அடைந்த துன்பங்கள் பாவங்களின் வழியில் அவர்களின் வாரிசுகளை வந்தடைவதாகவும் அதனை தவிர்க்க அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களின் ஆன்மா சாந்தியடைந்து சந்ததியினரை வாழவைக்கிறது.
திருப்புவனத்தில் வைகை ஆற்றங்கரையில் தினசரி ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். நேற்றைய தை அமாவாசை கரிநாளுடன் சேர்ந்து வந்ததால் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டபக்தர்கள் திருப்புவனத்திற்கு வந்திருந்தனர். வர்களுக்காக வைகை ஆற்றினுள் கீற்று கொட்டகை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.பக்தர்கள் வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் வழங்கி புஷ்பவனேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.