செஞ்சி கோட்டை வெங்கட்ரமணருக்கு பழங்களால் அலங்காரம்
ADDED :2826 days ago
செஞ்சி : செஞ்சி கோட்டை வெங்கட்ரமணருக்கு காணும் பொங்கலை முன்னிட்டு பழத்தோட்ட அலங்காரம் செய்தனர். செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு காலை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கருவறையில் பல்வேறு பழங்களை கொண்டு பழத்தோட்ட அலங்காரமும் செய்திருந்தனர். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கும் திருமஞ்சனமும், அலங்காரமும் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் சாமி தரிசனம் செய்தனர்.