உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் ரதசப்தமி திருவிழா: ஒரு நாள் பிரம்மோற்சவம்

திருமலையில் ரதசப்தமி திருவிழா: ஒரு நாள் பிரம்மோற்சவம்

திருமலை திருப்பதியில் நடைபெறும் வருடாந்திர நிகழ்வில் முக்கியமான விழா ரதசப்தமி விழாவாகும். பிரம்மோற்சவம் நடைபெறும் ஒன்பது நாட்களிலும் பல விதமான வாகனங்களில் வலம் வரும் சீனிவாசப்பெருமாள் ரதசப்தமி என்று அழைக்கப்படும் நாளன்று அனைத்து வாகனங்களிலும் காலை முதல் இரவு வரை வலம் வருவதால் அன்றைய தினத்தை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்றும் மினி பிரம்மோற்சவம் என்றும் அழைப்பர். வரும் 24ம் தேதி புதன்கிழமை நடைபெறும் ரதசப்தமி விழா விவரமாவது:

காலை 05:30 மணியில் இருந்து காலை 08:00 மணி வரை சூரிய பிரபை வாகனம்
காலை 09:00 மணியில் இருந்து காலை 10:00 மணி வரை சின்ன சேஷ வாகனம்
பகல்    11:00 மணியில் இருந்து பகல்     12:00 மணி வரை கருட வானம்
பகல்    01:00 மணியில் இருந்து  பகல்    02:00 மணி வரை ஹனுமந்த வாகனம்
பகல்   02:00 மணியில் இருந்து  பகல்   03:00 மணி வரை  சக்ரஸ்நானம்
பகல்   04:00 மணியில் இருந்து பகல்   05:00 மணி வரை கல்பவிருட்ச வாகனம்
மாலை 06:00 மணியில் இருந்து � �ரவு 07:00 மணி வரை சர்வபூபாள வாகனம்
இரவு  08:00 மணியில் இருந்து  இரவு  09:00 மணி வரை சந்திரபிரபை வாகனம்

வழக்கமான பிரம்மோற்சவத்தின் போது முதல் நாள் நடைபெறும் கொடியேற்றம் மற்றும் பெரிய சேஷ வாகன உலா மட்டும் இருக்காது மற்றபடி எட்டு நாட்களும் நடைபெறும் வாகன உலா அதே போல நடைபெறும என்பதால் ஒன்பது நாள் பிரம்மோற்சவத்தை காணமுடியாத பக்தர்கள் அன்று ஒரே நாளில் அனைத்து வாகனங்களையும் சுவாமியையும்  தரிசிக்க முடியும் பக்தர்கள் திரளாக வருவர். பக்தர்கள் கூட்டத்தை சமாளிப்பதற்காகவும், விழா ஏற்பாடுகளை கவனிப்பதாலும் அன்றைய தினம் ஆர்ஜிதா சேவை உள்ளீட்ட பல்வேறு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !