பெருந்துறை அருகே ஹயக்ரீவர் பூஜை
ADDED :2818 days ago
பெருந்துறை: பெருந்துறை அடுத்த, எல்லப்பாளையம், கரியமாணிக்கப்பெருமாள் கோவிலில், பத்து மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்காக, ஹயக்ரீவர் சிறப்பு யாக பூஜை நடந்தது. கல்விக் கடவுள் சரஸ்வதியின் குரு ஹயக்ரீவர். எனவே, பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், ஞாபகசக்தி அதிகரிக்கவும், கல்வி அறிவு பெருகவும், தங்களின் நோட்டு, புத்தகங்கள் ஆகியவற்றை யாகத்தில் வைத்து, சிறப்பு பூஜை செய்து பெற்றுக் கொண்டனர். முன்னதாக, ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.