நரிக்குடி இருஞ்சிறை ஏகசவுந்தரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2866 days ago
நரிக்குடி: நரிக்குடி, இருஞ்சிறை ஏக சவுந்தரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
முதல் நாள் காலை கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், தீபாராதனை, மாலை வாஸ்து சாந்தி, கடம் புறப்பாடு யாகசாலை பிரவேசம் நடந்தது.
ஜனவரி (19) வெள்ளிக்கிழமை கோ பூஜை, இரண்டாம் கால வேள்வியுடன் பத்து மணிக்கு கருடன் வானில் வலம் வர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.