செல்வகணபதி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED :2873 days ago
புதுப்பாளையம்: புதுப்பாளையம் செல்வகணபதி, சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வீரபாண்டி, இனாம் பைரோஜி புதுப்பாளையத்தில் பழமையான செல்வகணபதி, சின்ன மாரியம்மன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபி?ஷக விழா நடந்தது. கடந்த, 20ல் பெண்கள் முளைப்பாரி, புனிதநீர் நிரம்பிய தீர்த்தக்குட ஊர்வலத்துடன் விழா துவங்கியது. நேற்று, கும்பாபி?ஷகத்தையொட்டி நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. கோபுர கலசங்களுக்கு, 9:30 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி, கும்பாபி?ஷகத்தை நடத்தி வைத்தனர். வீரபாண்டி, பிச்சம்பாளையம், புதுப்பாளையம், ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி கோஷம் எழுப்பி, அம்மனை வழிபட்டனர்.