உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சமயபுரம் மாரியம்மன் கோவில், கும்பாபிஷேகம் நடந்தது. குமாரபாளையம், அரசு மருத்துவமனை எதிரில் உள்ள, சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 19ல் துவங்கியது. காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடங்கள் மேள வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, யாக சாலை பூஜைகள், மூன்று நாட்களாக நடந்தன. நேற்று காலை, 9:30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன. சிறப்பு விருந்தினர்களாக குமாரபாளையம், காந்தி நகர், அங்காளம்மன் கோவில் முதன்மை அர்ச்சகர் அங்கப்ப சுவாமி, ஸ்ரீமத் போகர்பழனி ஆதீனம் ஆகியோர் பங்கேற்றனர். பவானி சங்கமேஸ்வரர் கோவில் மணிகண்ட சிவாச்சாரியார், யோகேஷ் ஐயர் உள்ளிட்ட குழுவினர் கும்பாபி?ஷகத்தை நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !