இளம்பிள்ளை மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்
ADDED :2927 days ago
சங்ககிரி: இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை யில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில், 28 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக தேர் செய்யப்பட்டன. இதன் வெள்ளோட்டம், நேற்று நடந்தது. புதிய தேரை, இளம்பிள்ளை, காடையாம்பட்டி, புதுரோடு, சவுடம்மன் கோவில் தெரு, உழவர்சந்தை சாலை, சித்தர்கோவில் பிரிவு வழியாக, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். வழிநெடுகிலும் பெண்கள், சுவாமிக்கு தேங்காய், பழம், பூ, கொடுத்து பூஜை செய்து வழிபட்டனர். மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.