உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பைபிள் பொன்மொழிகள்

பைபிள் பொன்மொழிகள்

●  உடைகளுக்காக நீங்கள் கவலைப் படுவானேன்? வயல்வெளியிலுள்ள லீலி புஷ்பங்கள் எப்படி  வளருகின்றன என பாருங்கள். அவை உழைப்பதுமில்லை. நூற்பதுமில்லை.
●  நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம், பயத்தை புறம்பாக்கி விடுகிறது. பயம் வேதனையுள்ளது. ஆகையால், பயப்படுகிறவன் நேசத்துக்கு பூரண மானவன் அல்ல.
●  உன் கண்கள் நேராகவே பார்க்கட்டும்.
●  எவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை ஏமாற்றி கொண்டு, தன்னை பக்திமான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அவனுடைய பக்தி பொருளற்றது.
●  உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு. இவ்வாறு செய்வதினால் அவன் தன் தலை மீது நெருப்புத்தணலை குவிப்பவனாவாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !