பூம்பாறை குழந்தை வேலப்பர் தேரோட்டம்
ADDED :2887 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் கொடியேற்றத்துடன், தேரோட்ட விழா வரும் பிப். 10 ந்தேதி நடக்கிறது.
பழநி தண்டாயுதபாணி கோயிலின் உபகோயிலாக பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் திகழ்கின்றது. பிப் 2 ம்தேதி காலை கொடியேற்றமும், சேவல் வாகனமும், 3ம்தேதி அன்ன வாகனம், 4 ம்தேதி மயில் வாகனம், 5 ந்தேதி காளை வாகனம், 6 ம்தேதி ஆட்டுகிடா வாகனம், 7 ந்தேதி பூத வாகனம், 8 ந்தேதி சிங்க வாகனம், 9 ந்தேதி யானை வாகனம், 10 ந்தேதி காலை 11 தேதி முதல் 12 மணிக்குள் மேஷ லக்கினத்தில் தேர் வடம் பிடித்தல்நடக்கிறது. பூந்தேர் நிகழ்ச்சி, 11 ந்தேதி குதிரை வாகனத்தில் நடக்கிறது. ஏற்பாடுகளை பழநி தண்டாயுதபாணியின் இணை ஆணையர், செயல் தலைவர் செல்வராஜ் ,உதவி ஆணையர் மேனகா ஆகியோர் செய்து வருகின்றனர்.