உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தன் கோவிலில் தை கிருத்திகை விழா விமரிசை

திருப்போரூர் கந்தன் கோவிலில் தை கிருத்திகை விழா விமரிசை

திருப்போரூர் : திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற, தை கிருத்திகை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். திருப்போரூரில், பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, மாதம் தோறும் கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.அது போல, நேற்று தை மாத கிருத்திகை விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இதில், கந்தசுவாமி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. அதை தொடர்ந்து, சிறப்பு அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. நேற்று விடுமுறை நாள் என்பதால், விழாவில் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.மேலும் பல பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், காவடிகள் எடுத்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர். விழாவையொட்டி, காலை, மாலையில், மாடவீதிகளில் சுவாமியின் திருவீதியுலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !