முருகன் கோவில் உண்டியலில் ரூ.10 லட்சம் காணிக்கை
ADDED :2819 days ago
தலைவாசல்: தலைவாசல், வடசென்னிமலையில் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சென்னை, பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், அதிகளவில் வந்து செல்கின்றனர். இங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள், ஆறு மாதத்திற்கு பிறகு, இந்து அறநிலையத்துறை கோவில் ஆய்வாளர், சரவணன் முன்னிலையில், நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர். இதில், 10 லட்சத்து, 650 ரூபாய் இருந்தது. மேலும் தங்க, வெள்ளி நாணயம் உள்ளிட்டவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.