சந்திரகிரகணம்: 31ம் தேதி திருப்பதி கோயில் மூடல்
ADDED :2863 days ago
திருப்பதி: சந்திரகிரகணத்தையொட்டி வரும் 31ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. காலை 11 மணி முதல் இரவு 10.30 மணி வரை கோயில் நடை மூடப்படும் எனவும், அன்றைய தினம் இலவச உணவு மற்றும் காத்திருப்பு அறையில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.