ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :3127 days ago
ஊட்டி:ஊட்டி அடுத்துள்ள அப்புக்கோடு ஆனந்தமலை கோவிலில் கிருத்திகை பூஜை சிறப்பாக நடந்தது.ஊட்டி அடுத்துள்ள கீழ் அப்புகோடு பகுதியில் ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜையையொட்டி, அலங்கார பூஜை, அபிேஷக பூஜை, ஹெத்தையம்மனுக்கு ஆராதனை, நவகிரக தெய்வங்களுக்கு ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, ஆன்மிக சொற்பொழிவு, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் ராமசந்திரன் செய்திருந்தார்.