மகிஷாசுரமர்த்தினி்க்கு சிறப்பு பூஜை
ADDED :2949 days ago
திருத்தணி: மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், பிரதி செவ்வாய்க்கிழமை மூலவருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 105 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.பிற்பகல், 3:00 மணி முதல், மாலை, 4:30 மணி வரை ராகு காலம் என்பதால், திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.திருத்தணி சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மாள் கோவிலில், நேற்று, செவ்வாய்க்கிழமை என்பதால், மூலவருக்கு திரளான பெண்கள், தங்களது குடும்பத்துடன் வந்திருந்து மூலவரை தரிசித்தனர்.