உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர்காமம் கதிரேசன்

கதிர்காமம் கதிரேசன்

முருகனின் திருத்தலங்களில், கதிர்காமத்திற்கு சிறப்பிடம் உண்டு. இப்பெருமான், கதிரேசன் என்று அன்புடன் அனைவராலும் போற்றப்படுகிறான். இத்தலம் இலங்கையில், கொழும்பில் இருந்து, 230 கி.மீ.,யில் அமைந்துள்ளது. இங்கு கருவறையில், எவ்வடிவில் இறைவன் இருக்கிறான் என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. சன்னதியின் திருக்கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் தரையில், மயில் மீது இரு தேவியருடன் அமர்ந்திருக்கும் முருகனின் உருவம் உள்ளது. இதைப்போன்று மேலும் பல திரைச்சீலைகள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இப்பெருமானின் சன்னதி திறந்து வைக்கப்படுகிறது. மற்ற காலங்களில் திரையிட்டே பூஜை நடத்தப்படுகிறது.இங்கு ஆடி மாத உற்சவம் மிகவும் பிரபலமானது. ஆடி அமாவாசையன்று ஆரம்பித்து, ஆடி பவுர்ணமியில் தீர்த்தவாரி நடைபெறும். நாள்தோறும் யானை மீது ஊர்வலமாக ஒரு பெட்டி எடுத்துச் செல்லப்படும். அந்த பெட்டிக்குள் முருகனுக்குரிய எந்திரம் இருக்கிறது. இக்கோவிலின் பின்னால் உள்ள அரசமரத்தை சிங்களர்கள் வழிபடுகின்றனர். தமிழ் மக்களும், சிங்களர்களும் இணைந்து வழிபடுவது மத ஒற்றுமைக்கு வழி வகுப்பதாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !