உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாரியம்மன் சிலை ஊர்வலம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாரியம்மன் சிலை ஊர்வலம்

பனமரத்துப்பட்டி: மாரியம்மன், விநாயகர் சிலைகளை, கிராம மக்கள் ஊர்வலம் எடுத்துச்சென்றனர். பனமரத்துப்பட்டி அருகே, நல்லியாம்புதூரில், மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, மார்ச், 4ல் கும்பாபி?ஷகம் நடக்கவுள்ளது. அதையொட்டி, புதிதாக மாரியம்மன், விநாயகர் சிலைகளை, நேற்று, அவினாசியிலிருந்து வாங்கி வந்தனர். அதை, சந்தைப்பேட்டை விநாயகர் கோவில் முன் வைத்து, சிலைகளுக்கு பூஜை செய்தனர். மேள, தாளம், வாணவேடிக்கை முழங்க, வாகனத்தில் வைத்து, நல்லியாம்புதூருக்கு, ஊர்வலம் சென்றனர். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !