காரைக்குடியில் பிப்.19ல் சமஷ்டி உபநயனம்
ADDED :2899 days ago
மதுரை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பிப்.,19ம் தேதி சமஷ்டி உபநயனம் நடைபெற உள்ளது. காரைக்குடி செக்காலை நடேசன்தெருவில் உள்ள சங்கர மணிமண்டபத்தில் பிப்.,19 அன்று மதியம் 12:20 மணி முதல் 12:50 மணிக்குள் சமஷ்டி உபநயனம் நடைபெறும். தங்கள் குழந்தைகளுக்கு பூணுால் அணிவிக்க விரும்புவோர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு, 501 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தி பதியவும். பிப்.,10ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.வெளியூரை சேர்ந்தோர் ஆர்.முத்துசுப்பிரமணியன், தலைவர், பிராமணர் சங்கம் காரைக்குடி கிளை, 449, முத்து இல்லம், ரோஜாவீதி, சூடாமணிபுரம், காரைக்குடி-3 முகவரிக்கு அனுப்பவும். விபரத்திற்கு 93451 69735 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.