அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :5371 days ago
கடலூர் : கடலூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கடலூர், வண்டிப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை கோவில் தக்கார் நாகராஜன் செய்திருந்தார்.