உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணியில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

திருத்தணியில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

திருத்தணி:தேய்பிறை அஷ்டமியையொட்டி, சதாசிவலிங்கேஸ்வர சுவாமி கோவிலில், பைரவருக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நேற்று நடந்தன.

திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில், சதாசிவலிங்கேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள சொர்ணாஷ்ட பைரவர் சன்னதியில், மாதந்தோறும் பவுர்ணமி முடிந்த, எட்டாம் நாளில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், நேற்று மாலை, தேய்பிறை அஷ்டமியையொட்டி, பைரவர் சன்னதி முன், ஒரு யாகசாலை, ஒரு கலசம் வைத்து, சிறப்பு ஹோமம் நடந்தது. மூலவர் பைரவருக்கு விபூதி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம், குங்குமம் மற்றும் கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று மிளகு மற்றும் பூசணிக்காய் போன்றவற்றில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !