உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக அமைதி வேண்டி ஆன்மிக ஜோதி ஊர்வலம்

உலக அமைதி வேண்டி ஆன்மிக ஜோதி ஊர்வலம்

சங்ககிரி: உலக அமைதி, சாதி, சமய வேறுபாடுகள் நீங்கி, விவசாயம் செழிக்க வேண்டி, கடந்த, 7ல், சேலம், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள ஓம்சக்தி பீடத்தில், வேள்வி பூஜை செய்து, ஆன்மிக மகளிர் ஜோதி ஏற்றப்பட்டது. அது, ஓமலூர், மேட்டூர் வழியாக சென்று, நேற்று, சங்ககிரி, ஆதிபராசக்தி மன்றம் வந்தடைந்தது. அதையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. பின், சங்ககிரி நகரை சுற்றி, வரும், 28ல், ஆத்தூர் வழியாக, மேல்மருவத்தூர் சென்றடைகிறது. ஏற்பாட்டை, மாவட்ட தலைவர் சந்திரமோகன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !