உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி அம்மன் பிரம்மோற்சவம் 20ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

காமாட்சி அம்மன் பிரம்மோற்சவம் 20ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

காஞ்சிபுரம்:காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம், வரும், 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குவதால், அம்மன் வீதியுலா செல்லும் அனைத்து வாகனங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம், 2014ல் நடந்தது. அதன் பின், கோவிலில் திருப்பணிகள் நடந்தன. கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த ஆண்டு, வரும், 20ம் தேதி அதிகாலை, 4:00 - 5:15 மணிக்குள், கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. தினமும் காலை, இரவு வேளையில், வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிய, காமாட்சி அம்மன் வீதியுலா நடைபெறும். மூன்றாண்டுகளுக்கு பின் பிரம்மோற்சவம், அனைத்து வாகனங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் சில புதிய வாகனங்களில் எழுந்தருளி, அம்மன் வீதியுலா செல்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !