உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவக்கம்

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவக்கம்

நாமகிரிப்பேட்டை: ஆர்.புதுப்பட்டி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆர்.புதுப்பட்டியில் வரலாற்று சிறப்பு மிக்க துலுக்க சூடாமணி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், தை மாதம் கடைசி செவ்வாய் கிழமை பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கும். இந்தாண்டு திருவிழா, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. மாசி முதல் வாரத்தில் கம்பம் நடும் விழா, பங்குனி கடைசி வாரத்தில் தேர்த்திருவிழா நடக்கிறது. முன்னதாக பூச்சாட்டுதலில், மரிக்கொழுந்து, செவ்வந்தி, வெள்ளை செவ்வந்தி, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்களால், கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு, விநாயகர், முனியப்பன் பூஜை, அம்சாயி அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு, பூஜை செய்து பூச்சாட்டும் விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !