உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தங்கரர் கோவிலுக்கு மாணவர்கள் களப்பயணம்

தீர்த்தங்கரர் கோவிலுக்கு மாணவர்கள் களப்பயணம்

பெருந்துறை: பள்ளிக்கல்வித்துறை மூலம், பள்ளி பரிமாற்றத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, சென்னிமலை யூனியன், குமாரபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர்கள், 20 பேர், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, நேற்று வந்தனர். விஜயமங்கலத்தில் உள்ள, 1,500 ஆண்டுகள் பழமையான சந்திரப்பிரப தீர்த்தங்கரர் கோவிலுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். கோவிலின் வரலாறு, அமைப்பு, தொன்மை மற்றும் சிறப்புகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டன. குமாரபுரி மாணவர்களுடன், பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர்களும் பங்கேற்றனர். பள்ளி பரிமாற்றத் திட்டம், மாணவர்களின் அறிவுப் பரிமாற்றத்துக்கு வழி வகுத்துள்ளதாக களப்பயணத்தை ஒருங்கிணைத்த ஆசிரியர்கள் ஜெயந்தி, அமுதா, வளர்மதி, மூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !