உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசையில் என்ன செய்யலாம் ?

அமாவாசையில் என்ன செய்யலாம் ?

அமாவாசையில் நம் குடும்பத்தின் முன்னோர்களை நினைத்து வணங்கி புஜை செய்ய வேண்டும். மறைந்த பெரியோர்களுக்கு தர்பணம் செய்யும்போது அந்த பெரியோர்களின் பெயர்களை சொல்லி அவர்களின் ஆத்மாக்களை சாந்தி செய்ய வேண்டும் என்பதால்தான், ’பெயர் சொல்ல ஒரு பிள்ளை வேண்டும்‘ என்றார்கள் நம் முன்னோர்கள். எது நம்மை தடுத்தாலும் அந்த தடைகளை எல்லாம் தாண்டி பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) அமாவாசை பூஜை செய்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் நின்று வழிபாடுகள் செய்தால் கொடிய வினைகள் எதுவும் விலகிவிடும். அமாவாசை அன்று இறந்தவர்களுக்கு பிடித்த உணவை படைத்து பூஜை செய்து, படைத்த உணவை சிறிதளவு எடுத்து காக்கைக்கு வைத்தால், காக்கை உருவத்தில் இறந்தவர்கள் சாப்பிடுவதாக ஐதீகம்.

இறைவனுக்கு பூஜைகள், வழிபாடுகள் போன்றவை எந்த அளவுக்கு முக்கியமோ அதை விட பித்ருக்களுக்கு அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில் செய்கிற பூஜைகளும் வழிபாடுகளும் மிக முக்கியம். அத்துடன் அன்றைய நாளில் ஒருவருக்காவது அன்னதானமும், முடிந்தால் வஸ்திர தானமும் செய்யலாம். துஷ்டசக்திகளை விரட்டும் ஆற்றல் ஆத்மாவுக்கு உண்டு. துஷ்டசக்திகள், பித்ருபூஜையை தடையில்லாமல் செய்பவர்களை நெருங்காது. இதன் பிறகுதான் நாம் வணங்கும் குலதெய்வமும், இஷ்டதெய்வமும் நமக்கு நல்வாழ்க்கை தருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !