கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :2876 days ago
காடையாம்பட்டி: கும்பாபி?ஷகத்தை முன்னிட்டு, தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. காடையாம்பட்டி, மாரக்கவுண்டன்புதூரில் உள்ள, குபேரலிங்கேஸ்வரர் கோவிலில், புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, சொர்ணாம்பிகை உடன் சுவாமி கருவறை அமைக்கப்பட்டுள்ளது. வரும், 11 காலை, 7.15 மணிக்கு கும்பாபி?ஷகம் நடக்கவுள்ளது. அதையொட்டி, நேற்று காலை, பண்ணப்பட்டி விநாயகர் கோவிலிலிருந்து, ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி, தீர்த்தக்குடம் எடுத்து, ஊர்வலம் வந்து, கோவிலை அடைந்தனர். இன்று, முதல் கால வேள்வி, நாளை இரண்டாம் கால வேள்வி பூஜை, விமான கலசம் நிறுவுதல் நடக்கவுள்ளது.