உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் சிவராத்திரி பக்தர்களுக்கு வழங்க லட்டுகள் தயார்

கைலாசநாதர் கோவிலில் சிவராத்திரி பக்தர்களுக்கு வழங்க லட்டுகள் தயார்

விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு வழங்குவதற்காக 22 ஆயிரம் பிரசாத லட்டுகள் தயார் செய்யும் பணிகள் நடந்தது. விழுப்புரம் பெரியநாயகி உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் நாளை(13ம் தேதி) மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று காலை 7.00 மணிக்கு 1008 சங்குஸ்தாபன பூஜை ேஹாமம், பகல் 12.00 மணிக்கு பூர்ணாஹூதி, மாலை 3.30 மணிக்கு பிரதோஷம் நடக்கிறது. பின் மாலை 6.00 மணிக்கு முதல் கால பூஜை, இரவு 9.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, இரவு 11.00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 1008 சங்காபிஷேகம் நடக்கிறது. சிவராத்திரியை முன்னிட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்வதற்காக கைலாசநாதர் கோவிலில் 22 ஆயிரம் பிரசாத லட்டுகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றது.ஏற்பாடுகளை ஆய்வாளர் சரவணன், செயல் அலுவலர் மணி, கணக்காளர் அழகிரி ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !