உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ராஜகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சேலம்: ராஜகாளியம்மன் கோவில் கும்பாபி?ஷகம் கோலாகலமாக நடந்தது. சேலம், அம்மாபேட்டை, காமராஜ் நகர் காலனியில் உள்ள, ராஜகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 9ல் துவங்கியது. அன்று காலை, 5:00 மணிக்கு கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. அடுத்தநாள், இரண்டாம், மூன்றாம் கால பூஜை நடந்தது. நேற்று காலை, நான்காம் கால பூஜைக்கு பின், சிவாச்சாரியார்கள், கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர். இதையொட்டி, ராஜ அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். மாலை, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* ஓமலூர், பண்ணப்பட்டி அருகே, மாரக்கவுண்டன்புதூரில், குபேரலிங்கேஸ்வரர் கோவில், மடிக்காணிக்கை எடுத்து புனரமைக்கப்பட்டது. நேற்று காலை, 8:00 மணிக்கு, கலசங்கள் புறப்பாடு நடந்து, 9:00 மணிக்கு, கும்பாபி?ஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !