உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சிவராத்திரி பாடல்கள்

மகா சிவராத்திரி பாடல்கள்

சிவராத்திரியன்றைய தினத்தில், ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகத்தை படிப்பதால், ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவால் ஏற்படும் குறைகள் நீங்கும். நோய் அகன்று நலம் பெறலாம். சகல மங்களங்களும் உண்டாகும். இதில் எட்டு ஸ்லோகங்கள் உள்ளன.

“பிரம்மா, மகாவிஷ்ணு மற்றும் தேவர்களால் வணங்கப்படுவதும், பிரகாசமானதும்,
அழகுள்ளதும், துக்கத்தைப் போக்குவதும், எப்போதும் மங்கலத்தை அருள்வதுமான
மகாலிங்கத்தை போற்றுகிறேன்...” என சொல்லி விட்டு, இந்த ஸ்லோகத்தை
சொல்ல வேண்டும். இதிலுள்ள முக்கிய ஸ்லோகமும், அதன் பொருளும் தரப்பட்டுள்ளது.

கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

பொருள்: தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், நாகத்தால் சுற்றப் பட்டதும், தட்சனின் யாகத்தை நாசம் செய்ததும், மங்கள நிகழ்ச்சிகளை நிகழ்த்து வதுமான மகாலிங்க மூர்த்தியை வணங்குகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !