சிவராத்திரி விழா: சந்தனக்காப்பில் காரணீஸ்வரர்
ADDED :2795 days ago
ஊத்துக்கோட்டை: சிவன் கோவில்களில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில், திரளான பக்தர்கள் வழிப்பட்டனர். ஊத்துக்கோட்டை அடுத்த, காரணி கிராமத்தில் உள்ள காரணீஸ்வரர் கோவிலில், 3ம் ஆண்டு சிவராத்திரி விழாவை ஒட்டி, நேற்று காலை, 7:00 மணிக்கு, முதல் கால பூஜை, பகல், 12:00 மணிக்கு, 2ம் கால பூஜை, பிற்பகல், 3:00 மணிக்கு, 3ம் கால பூஜை, இரவு, 9:00 மணிக்கு, 4ம் கால பூஜையும் கோலாகலமாக நடந்தது. பூஜை முடிந்த பின், சந்தனம், வெற்றிலை, விபூதி ஆகியவற்றால் மூலவர் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல், ஊத்துக்கோட்டையில் உள்ள முனீஸ்வரர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.