வேதபுரீஸ்வரர் கோவிலில் வேத பாராயணம் நிகழ்ச்சி
ADDED :2850 days ago
புதுச்சேரி : வேதபுரீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு வேத பாராயணம் வாசித்தல் நிகழ்ச்சி நடந்தது. மகா சிவராத்திரியை முன்னிட்டு, புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் ராஜா சாஸ்திரிகள் தலைமையில், 11 முறை ருத்ரா வேதபாராயணம் வாசித்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் வேத ஆசிரமகுருகுல மாணவர்கள் பங்கேற்றனர். இக்கோவிலில், மகாசிவராத்திரியை முன்னிட்டு மாலை 6:00 முதல் விடியற்காலை 6:00 மணி வரை நான்கு கால பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடந்தது. இதில், பல்வேறு பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.