கிரிவலம் வரும் அனுமன்!
ADDED :2840 days ago
வண்டலூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் புதுப்பாக்கத்தில் மலை வீரஆஞ்சநேயர் கோயில் உள்ளது. மூலவர் சாளக்கிராமத்தால் ஆனவர். எதிரில் சீதாதேவி, லட்சுமணன் சமேதரராக ராமபிரான் சேவை சாதிக்கிறார். 108 திவ்யதேசங்களுள் ஒன்றான திருவிடந்தை ஆதிவராக சுவாமி தலத்தின் பரிவேட்டை தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. இங்கு பக்தர்களுக்கு வலம்புரிச் சங்கில் தீர்த்தம் கொடுப்பது தனிச்சிறப்பு. பவுர்ணமி தோறும் ஆஞ்சநேயர் இந்த மலையை வலம் வருவதாக ஐதிகம். பக்தர்கள் ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொண்டு கிரிவலம் வந்தால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.