ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2)
யார் ஒஸ்தி நீங்க தான் ஒஸ்தி (80/100)
விடாப்பிடியாக செயல்படும் குணமுள்ள ரிஷபராசி அன்பர்களே!
பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு-கேதுவின் அமர்வு இந்த வருடம் உங்களுக்கு தாராள பணவரவு தரும் வகையில் உள்ளது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தேவை பெருமளவில் பூர்த்தியாகும். பேச்சில் நிதானம் பின்பற்றுவது அவசியம். அடுத்தவர்களின் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். கவனம் தேவை. சகோதரர்கள் பாசத்துடன் நடந்து உங்கள் இன்ப துன்பங்களில் உதவிபுரிவர்.
வீடு, வாகனம் சார்ந்த வகையில் வருட முற்பகுதியில் நன்மையே நடந்து வரும். பிற்பகுதியில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். வீடு, வாகன பாதுகாப்பில் கவனமாக இருந்தால் தான், திருடுபோகாமல் தவிர்க்கலாம். புத்திரர்கள் பெற்றோரின் சூழ்நிலை, மன உணர்வுகளை புரிந்து ஆதரவாக நடந்து கொள்வர். இஷ்ட தெய்வ அருள் துணைநின்று பாதுகாக்கும். பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானம் குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும்.
உடல்நலம் பலம்பெறும். தகுதி, திறமையைப் பயன்படுத்தி சாதனை புரிகிற வகையில் தொழில் பணியில் ஈடுபடுங்கள். கடன் தொந்தரவு மெல்ல மெல்ல குறையும். வழக்கு, விவகாரம் வராத அளவிற்கு செயல்பட வேண்டும் என்கிற மன உறுதியுடன் நடந்து கொள்வீர்கள். கணவன், மனைவியிடையே ஒற்றுமை நிலவும். நம்பகமான நண்பர்கள் உறவினர்களின் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. குடும்பத்தில் திட்டமிட்ட மங்கல நிகழ்ச்சியை நல்லவிதமாக நடத்தி மகிழ்வீர்கள். வெளியூர் பயணத்தினால் நன்மை நடக்கும். மொத்தத்தில் இந்த ஆண்டு மிக உயர்ந்த ஆண்டாக அமையும்.
தொழிலதிபர்கள்: மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், டிராவல் ஏஜென்சி, டிபார்ட்மென்டல் ஸ்டோர், நிதி, கல்வி நிறுவனம், பால்பண்ணை, அரிசி ஆலை, அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், பிளாஸ்டிக், மின்சார மின் னணு சாதனம், வாகன உதிரி பாகம், தோல், கட்டுமானப் பொருள் உற்பத்தி செய்பவர்கள் தொழிலில் வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்ததை விட அதிக லாபம் இருக்கும். மற்ற தொழில் செய்வோருக்கும் லாபத்தில் குறைவில்லை. தொழில் மேம்பாட்டுக்கான கடனுதவி கிடைக்கும். பணபரிமாற்றத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதால் சிரமம் தவிர்க்கலாம். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு நல்ல முறை யில் அமையும். பங்குதாரர்களின் ஆலோசனைகளால் அபிவிருத்தி உண்டாகும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, தோல், பிளாஸ்டிக், காய்கறி, பழம், மின்சார, மின்னணு சாதனங்கள், பால்பொருள், வாகனம், ஆட்டோமொபைல் உதிரி பாகம், கட்டுமானப் பொருள்,அழகு சாதனம், ஸ்டேஷனரி, மருந்து, பாத்திர வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகும். லாபம் நன்றாக இருக்கும். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட கூடுதல் லாபம் இருக்கும். புதிய கிளை துவங்க முயற்சிப்பவர்கள் அளவான மூலதனத்துடன் செயல்படுத்தலாம். போட்டி வெகுவாக குறையும். சக வியாபாரிகள் தொழிலில் ஒத்துழைப்பர். நவீனஉத்திகளை பயன்படுத்தி வாடிக் கையா ளர்களை வெகுவாக கவர்வர்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக பணியாளர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு விலகும். பணிகளைச் சிறப்பாகச் செய்து நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவீர்கள். உடல்நலம் ஆரோக்கியத்துடன் இருப்பதால் பணிச்சுமையை சமாளிப்பதுடன், ஓவர்டைம் போன்றவற்றால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைப் பயன்கள் ஒவ்வொன்றாக கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு தொழிலில் ஆர்வம் கூடும். சம்பள உயர்வு, விண்ணப்பித்த கடன் கிடைத்தல் ஆகிய நற்பலன் ஏற்படும். ஜென்மகுரு மே மாதம் வர இருப்பதால், சற்று கவனமாக நடந்து கொண்டால் போதும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்கு தகுந்த முக்கியத்துவம் தருவதால் மட்டுமே சிரமம் குறையும். கடனுக்கு கிடைக்கிறதென்று பயன்தராத வீட்டு சாதனங்கள் வாங்கக்கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் சிறப்பான உற்பத்தி, அதிக லாபம் காண்பர். உற்பத்தி செலவு அதிகரிக்கும். தகுதிக்கு மீறிய அளவில் கடன் பெறக்கூடாது.
மாணவர்கள்: மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம், கலை, அறிவியல், கம்ப்யூட்டர், ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங், விவசாய மாணவர்களுக்கு எதிர்பார்த்த தேர்ச்சி கிடைக்கும். மற்ற துறை மாணவர்கள் இவர்களை விட சிறப்பாகப் படிப்பார்கள். ஆரம்ப மற்றும் மேல்நிலை மாணவர்கள் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடப்பர். சக மாணவர்கள் சுமூகமாக நடந்து கொள்வார்கள். படிப்புக்கான பணம் வந்து சேரும். அரசியல்வாதிகள்: ஆதரவாளர்கள் நிறைய பணம் எதிர்பார்ப்பார்கள். சமூகப்பணியில் நற்பெயர் கிடைக்கும். எதிரிகளால் இருந்த சிரமம் குறையும். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புத்திரர்கள் அரசியல்பணி சிறக்க உதவுவர்.
விவசாயிகள்: பயிர்வளர்ப்பில் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை கவனமுடன் பின்பற்ற வேண்டும். மகசூல் சராசரி அளவில் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஆதாயம் கிடைக்கும். நிலப்பிரச்னையில் அனுகூலம் உண்டு. சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரக்கூடாது.
குரு பெயர்ச்சி : ராசிக்கு 8,11க்கு அதிபதியான குரு, மே 16வரை மேஷத்தில் விரயகுருவாக இருக்கிறார். பின் உங்கள் ராசிக்குப் பெயர்ந்து ஜென்மகுருவாக மாறுகிறார். இதனால், ஆண்டின் முற்பகுதியில் பொருளாதார நெருக்கடி, தேவையற்ற செலவு ஏற்படும். இக்கால கட்டத்தில் ஆடம்பர எண்ணத்தை கைவிடுவது அவசியம். மே 17 முதல் குருவின் 5,7,9 ஆகிய பார்வைகள் ராசியின் 5,7,9 ஆகிய இடங்களில் படுகின்றன. இதனால், ஆண்டின் பிற்பகுதியில் பிள்ளைகள் கல்வியில் வளர்ச்சி காண்பர். பூர்வீக சொத்தில் வருமானம் கூடும். திருமணத்தடை நீங்கி விரைவில் எதிர்பார்த்த வாழ்க்கைத்துணை அமையும். நண்பர்களின் உதவி சரியான தருணத்தில் கைகொடுக்கும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்து வந்த பகை விலகி உறவு மேம்படும்.
ராகுகேது பெயர்ச்சி : ராசிக்கு ஏழாம்வீடான விருச்சிகத்தில் ராகு இருப்பதால், தகுதி குறைவானவர்களின் நட்பு உண்டாகும். வெளியூர் பயணத்தால் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காது.மே 17ல் ரிஷபத்திற்கு குரு மாறுவதால், ராகுவால் உண்டாகும் கெடுபலன்கள் அகலும். ஆண்டின் இறுதியில்
(டிசம்பர் 2) ராகு ஆறாம் வீடான துலாமிற்கு மாறுவது சிறப்பாகும். இதனால், லட்சுமியோகம் உண்டாகும். கேது, உங்களின் ஜென்மராசியான ரிஷபத்தில் ஆண்டுமுழுவதும் சஞ்சரிக்கிறார். இதனால், அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. எதிரிகளால் பிரச்னை தலைதூக்கும். சுபநிகழ்ச்சிகளை நடத்த விடாமுயற்சி தேவைப்படும். டிச.2ல் கேது மேஷத்திற்குப் பெயர்ச்சியாகிறார்.
பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஏற்படும்.
பரிகாரப் பாடல்:
ஓம் தென்திசை நோக்கிய தெய்வமே போற்றி
ஓம் கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி
ஓம் கழலடைந்தார் செல்லும் கதியே போற்றி
ஓம் அற்றவர்கட்கு ஆரமுதமானாய் போற்றி
ஓம் அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி.