உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதுனம் (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

மிதுனம் (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

கைக்கு அடங்காம போகும் கல்யாண செலவு (70/100)

வாழ்க்கையை ரசித்து வாழும் மிதுனராசி அன்பர்களே!

பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு-கேது இவர்களில் குரு அனுகூல பலன்களை தரும் வகையில் உள்ளார். வெகுநாள் நிறைவேறாத பணிகளை உற்சாகத்துடன் செயலாற்றி நிறைவேற்றுவீர்கள். உபரியாக கிடைக்கிற வருமானத்தை சேமிப்பாக மாற்றுவீர்கள். தியானம், தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையும் ஆர்வமும் வளரும். நட்புடன் பேசி நல்லவர்களின் மனதில் இடம்பெறுவீர்கள். சகோதர, சகோதரிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு வகையில் செலவு கூடும். பயணத்தில் சீரான வேகம் பின்பற்றுவதால் விபத்து வராமல் தவிர்க்கலாம். பூர்வசொத்தில் வருட முற்பகுதியில் அதிக வருமானமும், பிற்பகுதியில் குறைந்த பணவரவும் உண்டு. புத்திரர்கள் நன்னடத்தை குறைவான நண்பர்கள் சிலருடன் ஊர் சுற்றுகிற கிரகநிலை உள்ளது.

உடல்நலம் சீராக இருக்க தகுந்த சிகிச்சை உதவும். எதிரிகளிடம் விலகிப்போவதால் வீண்செலவு, காலவிரயம் வராமல் நிம்மதியான வாழ்க்கை அமையும். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை உருவாக்குவர். உறவினர்களிடம் நற்பெயர் கிடைக்கும்.  குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். ஆனால் செலவு கைக்கடங்காமல் போகும். மூத்த சகோதர, சகோதரிகள் உங்களின் ஆடம்பரம் மற்றும் கவனக்குறைவான செயல்களை கண்டிப்பார்கள். அதற்காக அவர்களிடம் கருத்து வேறுபாடு கொள்ளாமல், அறிவுரையாக ஏற்று நடந்தால் எதிர்காலத்துக்கு நல்லது. பெற்றோரின் தேவை அறிந்து நிறைவேற்றுவதால் அவர்களிடம் இருந்து வருகிற கோபதாப சொற்களை தவிர்க்கலாம். வெளியூர் பயணத்தில் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகுவதில் நிதானமாக இருப்பது நல்லது.

தொழிலதிபர்கள்: மருத்துவமனை, ட்õட்ஜ், ஓட்டல், டிராவல் ஏஜென்சி, டிபார்ட்மென்டல் ஸ்டோர், நிதி, கல்வி நிறுவனம், பால்பண்ணை, அரிசி ஆலை, அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், பிளாஸ்டிக், மின்சார மின்னணு சாதனம், வாகன உதிரிபாகம், தோல், கட்டுமானப் பொருள், மினரல்வாட்டர், குளிர்பானம் உற்பத்தியாளர்கள் தொழில் சார்ந்த வகையில் உருவாகிற சில சிக்கல்களை சந்தித்தாலும், அதைச் சரிசெய்து வளர்ச்சி காண்பர். அனுபவசாலிகளின் ஆலோசனை கிடைக்கும். சேமிக்கவும் வாய்ப்புண்டு. பணியாளர்களின் ஒத்துழைப்பு சீராக கிடைக்க சில சலுகைகளை வழங்கி அதிகச் செலவையும் சந்திப்பீர்கள்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, தோல், பிளாஸ்டிக், காய்கறி, பழம், மின்சார, மின்னணு சாதனங்கள், பால்பொருள், வாகனம், ஆட்டோமொபைல் உதிரி பாகம், கட்டுமானப் பொருள், அழகு சாதனம், ஸ்டேஷனரி, மருந்து, பாத்திரம், பேக்கரி, பூஜை பொருட்கள், ஸ்டேஷனரி பொருட்கள், இறைச்சி, பட்டாசு, உரம், குளிர்பானம் விற்பனை செய்பவர்களுக்கு போதுமான லாபம் இருக்கும். கூடுமானவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் கடன் சுமை வராமல் தவிர்க்கலாம். போட்டி அதிகம் என்றாலும், மன உறுதியுடன் சமாளித்து நிம்மதி காண்பீர்கள். நீண்டகால கடன்பாக்கி வசூலாகி வியாபாரத் தேவைக்கு பயன்படும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், எப்பாடு பட்டேனும் அன்றைய பணியை அன்றே முடிப்பர். சில குளறுபடிகள் ஏற்பட்டாலும், அதைச் சரிசெய்ய சக பணியாளர்களில் நல்லவர்களின் உதவி கிடைக்கும். சம்பளம் வழக்கத்தை விட சற்று கூடுதலாகும். அதிகாரிகளின் குறையை விமர்சித்து சிக்கிக் கொள்ளக்கூடாது. வாகனம் ஓட்டுதல், இயந்திரப் பணியில் உள்ளவர்கள் தகுந்த ஓய்வுக்குப் பின் பணிக்குச் செல்வது விபத்துகளில் இருந்து தப்ப வைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் குழப்பம் இல்லாத மனதுடன் செயல்பட்டு பணியில் சிறப்பினை பெறுவர். சலுகைகள் வழக்கம் போல் கிடைக்கும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படலாம். குடும்பப் பெண்கள் கணவருடன் இணக்கமாக நடந்து கொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உறவினர்களிடம் நன்மதிப்பும் நிறைந்திருக்கும். பெண் குழந்தைகளுக்கு திருமணம் நிச்சயமாகும். விரும்பிய வகையில் ஆபரண சேர்க்கை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் உற்பத்தி, விற்பனை காண்பர். லாப பணத்தை புதிய தொழில்களில் முதலீடு செய்யும் போது அனுபவஸ்தர்களின் யோசனையைக் கேட்பது நல்லது.

மாணவர்கள்: மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம், கலை, அறிவியல், கம்ப்யூட்டர், ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங், விவசாயம், வணிகவியல், வங்கியியல், மேலாண்மை படிப்பு, ஆசிரியர் துறை சார்ந்த மாணவர்கள் படிப்பில் இருந்த மந்தநிலையை சரிசெய்து தரதேர்ச்சியில் முன்னேற்றம் காண்பர். மற்ற துறையினரும், ஆரம்ப, மேல்நிலை மாணவர்களும் ஆசிரியர், பெற்றோரின் பாராட்டு பெறுவர். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது. படிப்புக்கான பணவசதி சீராக கிடைக்கும். வேலைவாய்ப்பை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் நன்மதிப்பை பெற ஆர்வமுடன் பணி புரிவீர்கள். கடந்த காலத்தில் இருந்த அவப்பெயர் விலகும். ஆன்மிக நம்பிக்கை சிறந்து
மனதிலும் உடலிலும் புத்துணர்வு பிறக்கும். குடும்ப உறுப்பினர்கள் அரசியல் பணிக்கு இயன்ற அளவில் உதவுவர். எதிரிகளிடம் தேவையற்ற விவாதம், எதிர் நடவடிக்கை தவிர்ப்பதால் நிம்மதியாக இருக்கலாம்.

விவசாயிகள்: மகசூல் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் எதிர்பார்த்த லாபம் உண்டு. நிலம் தொடர்பான வில்லங்கம் நீங்கும்.

குருபெயர்ச்சி : ராசிக்கு 7,10 க்கு அதிபதியான குரு, மே 16 வரை மேஷத்தில் சஞ்சரிக்கிறார். பின் ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஆண்டின் முற்பகுதியில் பணியில் ஆர்வம், முயற்சியில் வெற்றி, பொருள் வரவு ஆகிய அனுகூல பலன்கள் உண்டாகும்.  மே17 முதல் குருவின் 5,7,9 ஆகிய பார்வைகள் 4,6,8 ஆகிய ஸ்தானங்களில் பதிகின்றன. ஆண்டின் பிற்பகுதியில் நன்மை பல உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். சிலருக்கு புதிய வீடு வாங்குவதற்கும் யோகம் உண்டு. தாயின் மனமறிந்து செயல்பட்டு அவரது ஆசியைப் பெறுவர். நோய்நொடிகளில் இருந்து விடுதலை கிடைக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். கடன் பெருமளவில் அடைபடும். தொழிலில் வளர்ச்சியும் லாபமும் உண்டாகும்.

ராகுகேது பெயர்ச்சி :  ராசிக்கு ஆறாம் வீடான விருச்சிகத்தில் ராகு இருப்பதால், முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்துடன் திகழும். வெளியூர், வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு உண்டு. ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 2) ராகு ஐந்தாம் வீடான துலாமில் பிரவேசிக்கிறார். கேது ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் அனுகூலமற்று இருக்கிறார். இதனால், முக்கியமான பொறுப்புகளை உங்கள் நேரடி கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது. சிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். அடிக்கடி உடல் சோர்வு, அசதி ஏற்படும். குருவின் ரிஷப மாறுதலால், கேதுவால் உண்டாகும் கெடுபலன் நீங்கும். மனதில் ஆன்மிக எண்ணம் மேலோங்கும். ஆண்டின் இறுதியில் கேது ராசிக்கு பதினொறாம்வீடான மேஷத்திற்குப் பெயர்வது சுபபலன்களை உண்டாக்கும்.

பரிகாரம் : பெருமாளை வழிபடுவதால் தொழில் வளர்ச்சியும் பணவரவும் கூடும்.

பரிகாரப் பாடல்:
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்- செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !