உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியபட்டினம் குதிரைமலையான் சாமிக்கு பாரிவேட்டை விழா

பெரியபட்டினம் குதிரைமலையான் சாமிக்கு பாரிவேட்டை விழா

கீழக்கரை: பெரியபட்டினம் குதிரைமலையான் சாமிக்கு மாசி பாரிவேட்டை விழா நடந்தது. சப்த கன்னிமார்கள், குதிரைமலையான் கருப்பண்ணசுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சேவல், கிடாக்களை வெட்டி பலியிட்டு நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர். பக்தர்கள் அக்னிச்சட்டி, அலகு குத்தி அதிகாலையில் பூக்குழி இறங்கினர். ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி ஜீவானந்தம் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து குலதெய்வ குடிமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !