ராசிபுரம் அம்மன் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் பரவசம்
ADDED :2873 days ago
ராசிபுரம்: ராசிபுரம், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த தீ மிதி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராசிபுரம், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயானக் கொள்ளை திருவிழா, கடந்த, 6ல் தொடங்கியது. நேற்று காலை, அம்மனுக்கு சக்தி கரகம் ஏந்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து, தீ மிதி விழா நடந்தது. குழந்தைகள், பெண்கள், முதியோர் என, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். நாளை, ராசிபுரம் முத்துகாளிப்பட்டி மயானத்தில் மயான கொள்ளை பூஜை நடைபெறும். வரும், 19ல், அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடக்கவுள்ளது.