உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தாயி அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

ஆனந்தாயி அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

இடைப்பாடி: இடைப்பாடி அருகே, ஒட்டப்பட்டி, ஆனந்தாயி அங்காளம்மன் கோவிலில், மாசி திருவிழா, கடந்த, 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, தீ மிதி விழா நடந்தது. பரமானந்த சுவாமிகள், அக்னி கரகத்துடன், குண்டத்தில் இறங்கி, விழாவை துவக்கிவைத்தார். இதில், திரளான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, மயானக்கொள்ளை, ஆனந்தாயி அம்மன் திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !